எத்தியோப்பியாவிலிருந்து 230 பேருடன் இலங்கை வந்த விசேட விமானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

எத்தியோப்பியாவிலிருந்து 230 பேருடன் இலங்கை வந்த விசேட விமானம்

ஆபிரிக்க கண்டத்திலுள்ள பல நாடுகளில் வேலை வாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்கள் 230 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம், எத்தியோப்பியாவிலிருந்து இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு வருகை தந்த விமானப் பயணிகள், எத்தியோப்பியாவை அண்டியுள்ள நாடுகளில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்தவர்கள் என்பதோடு, அவர்கள் விசேட போக்குவரத்து வழியாக அடிஸ் அபாபா நகருக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1710 எனும் விசேட விமானம் மூலம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து இவ்விமானப் பயணிகள் இன்று அதிகாலை 3.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment