காத்தான்குடி பிரதேசத்தில் 2000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் - முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

காத்தான்குடி பிரதேசத்தில் 2000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் - முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்

எதிர்வரும் 2021ம் ஆண்டுக்குள் காத்தான்குடியை மையப்படுத்தி ஆடைத்தொழிற்சாலையொன்று அமைக்கப்பட்டு 2000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் பகுதியில் நேற்று (3) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

குறித்த மக்கள் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன், ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் வாஸித் அலி, ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் தஸ்லீம், கட்சியின் உச்ச பீட உறுப்பினர்களான தபாலதிபர் நஸீர் மற்றும் கபூர், மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மதீன் உற்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஆதிப் அஹமட்

No comments:

Post a Comment