மேடை நாடகங்கள் உள்ளிட்ட அரங்குகள் ஜூலை 15 இல் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

மேடை நாடகங்கள் உள்ளிட்ட அரங்குகள் ஜூலை 15 இல் திறப்பு

மேடை நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் இம்மாதம் 15ஆம் திகதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரங்குகளில் காணப்படும் ஆசனங்களில் 50 வீதமான ஆசனங்களுக்கு மாத்திரம் ரசிகர்கள் கலந்துகொள்ளும் வகையில், நிகழ்ச்சியொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment