மட்டக்களப்பு மக்களை தொடர்ந்தும் யாரும் ஏமாற்ற முடியாது, காலம் கடந்து உணர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : பிரசாந்தன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 24, 2020

மட்டக்களப்பு மக்களை தொடர்ந்தும் யாரும் ஏமாற்ற முடியாது, காலம் கடந்து உணர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : பிரசாந்தன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் சி.சந்திரகாந்தன் மகிந்த ராஜபக்ஷ அரசுடன் எவ்வாறு இணக்க ஆட்சி நடாத்தி கிழக்கு தமிழர்களுக்கான இருப்பினையும் தனித்துவத்தினையும் அபிவிருத்தியையும் செய்து காட்டிய பிற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்த ராஜபக்ஷ அரசுடன் பேசலாம் என குறிப்பிட்டுள்ளனர் என்றால் சி.சந்திரகாந்தனுடைய தூரநோக்கு சிந்தனையையும் அவரின் செயற்பாட்டினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றுதான் காலம் கடந்து உணர்ந்திருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வேட்பாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுமார் 40 வருடங்களாக 1976ம் ஆண்டு வட்டுக் கோட்டை தீர்மானத்திற்கு பின்பு மக்களிடம் வாக்கு கேட்டு மக்களின் வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியம் பேசுகின்றவர்கள் இன்று வரை மக்களுக்கு எதுவும் செய்யாமல் மக்கள் தொடர்ந்தும் வறுமையின் பிடியில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். அதேபோன்று தனித்துவமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுவதற்காக என்னென்ன வழிகள் இருக்கு என்பதனை தேடிக் கெண்டிருக்கின்றார்கள்.

40 வருடங்களாக எதுவும் செய்யாமல் மக்கள் இன்று வீதிகளில்லாமல் வீடுகள் இல்லாமல் மலசல கூடம் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடுகின்ற நிலமையும் தங்களது நியாயமான தனித்துவத்தைபேன முடியாமல் நிலம் பறிக்கப்பட்டு நிர்வாகம் பறிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக மடக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் தொடர்ந்தும் ஏங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் மீண்டும் தேர்தல் காலத்தில் மக்களுக்கான போலி வாக்குறுதிகளை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கொடுக்கப்பட்டது அவர்கள் எதை செய்திருக்கின்றார்கள் என்றால் ஒன்றுமில்லை. இதேபோன்று 2015 ஆம் ஆண்டிலும் 3 ஆசனங்களைப் பெற்று ஜக்கிய தேசிய கட்சி அரசுக்கு ஆதரவளித்தனர் அந்த நேரத்திலும் எதுவும் செய்யாமல் மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இம்முறை 20 க்கு மேற்பட்ட ஆசனங்களை தாருங்கள் தமிழரின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவோம் என சம்மந்தன் ஜயா தெரிவித்துள்ளார். அன்று 22 ஆசனங்களை வைத்துக் கொண்டிருந்தவர் இம்முறை 20 ஆசனங்களுக்கு மேல் பெற முடியாது ஏனென்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் சிவனேசத்துரை சந்திரகாந்தனை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வீடுதலை புலிகள் கட்சிக்கு 2 ஆசனங்கள் வரும் என்பதால் அந்த ஆசனங்களை கழித்து விட்டு தனக்கு 20 ஆசனம் போதும் என்று சம்மந்தன் ஜயா கேட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் கௌரவ தலைவர் 4 ஆண்டுகள் செயற்படுத்திய வேலைத்திட்டங்களை இவர்கள் 40 ஆண்டுகள் எதுவும் செய்யாமலிருந்து விட்டு மீண்டும் மக்களிடம் வருகிறார்கள். தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதனுடன் இணைந்துள்ள வேட்பாளர்களையும் மக்கள் ஆதரிக்க தீர்மானித்திருக்கின்றார்கள் என்கின்ற வெளிப்படையான முடிவு தேர்தலின் பின்பு தெரியும்.

மட்டக்களப்பு மக்களை தொடர்ந்தும் யாரும் ஏமாற்ற முடியாது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பதனை மக்கள் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்பதனை தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இதனை மக்கள் நன்றாக விளங்கியிருக்கின்றார் மாகாண சபை ஆட்சி தேவையில்லை என்றவர்கள் மாகாண சபை ஆட்சிக்குள் வந்தார்கள். 

பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது சிவனேசத்துரை சந்திரகாந்தன் சிறையிலிருக்கின்றார் அவருக்கு மக்கள் எவ்வாறான ஆதரவு இருக்கும் என்று கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படடிருந்த போது தான் குறிப்பாக 42000 ற்கு மேற்பட் மக்கள் வாக்களித்து இருந்தார்கள். ஏன்றார்.

No comments:

Post a Comment