தேர்தல்கள் ஆணைக்குழு ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது : உரிமைகள் மறுக்கப்படுகிறது என்கிறார் விமல் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

தேர்தல்கள் ஆணைக்குழு ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது : உரிமைகள் மறுக்கப்படுகிறது என்கிறார் விமல்

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்த்தரப்பினருக்கு நன்மை பயக்கும் விதத்தில் தேர்தல் தொடர்பான நிபந்தனைகளை விதிக்கிறது. ஆணைக்குழு ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது. விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளினால் வேட்பாளர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அநுராதபுரம் - தம்புத்தேகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்தரப்பில் ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றார்கள், மறு தரப்பினர் ஆதரிக்கிறார்கள். இத்தன்மையினை மக்கள் விடுதலை முன்னணியில் காணலாம். நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சி ஒன்றும் கிடையாது. எதிர்க்கட்சியின் செயற்பாடுகளையும் ஆளும் தரப்பினர் ஆற்ற வேண்டிய நிலை ஆளும் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விதிக்கும் நிபந்தனைகள் முன்னொருபோதும் இல்லாததாக உள்ளது. வேட்பாளர்கள் தங்களின் காரியாலயத்தில் கூட போட்டியிடும் இலக்கம், சின்னம் மற்றும் உருவப்படங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பது குறித்து ஆணைக்குழு தெளிவுப்படுத்த வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்த்தரப்பினருக்கு ஆதரவாகவே செயற்படுகிறது. விதிக்கப்பட்டும் நிபந்தனைகளினால் எதிர்த்தரப்பினர் நன்மையடைகிறார்கள். கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு வேட்பாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது. பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் இன்னும் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.

அனைத்து வேட்பாளர்களும் ஊடகங்களில் வாயிலாக தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாத பொருளாதார நெருக்கடி நிலை தற்போது காணப்படுகிறது. ஆகவே தேர்தல் ஆணைக்குழு வேட்பாளர்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் செயற்பாடுகளை வகுக்க வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment