கறவைப் பசு இறக்குமதிக்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

கறவைப் பசு இறக்குமதிக்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

கடந்த 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முறையில் இலங்கைக்கு மீண்டும் கறவைப் பசுக்களை கொண்டுவரும் திட்டம் செயற்படுத்தப்பட்டால் அதற்கு எதிர்பினை வெளிப்படுத்துவோம் என்று இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கறவைப் பசுக்கள் இறக்குமதி செய்தல் தொடர்பாக கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினது உப செயலாளர் வைத்தியர் எஸ்.சுகிர்தனால் நேற்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு காலப்பகுதிகளில் இலங்கைக்கு கறவைப் பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. 

இலங்கையின் நாளந்த பால் தேவை 32 Million Litres ஆக காணப்படும் அதேவேளை 1.2 மில்லியன் லீற்றர் பாலே தேசிய ரீதியில் வருகிறது. இவற்றில் 95% அதிகமான பால் சிறிய நடுத்தர பண்ணையாளர்களினாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

அத்தோடு மேலதிகமான தேவைப்படும் 2 Million Litres பால் தேவையினை வெளிநாடுகளில் ஈடு செய்யப்படுகிறது. இருந்தும் இதற்கான இறக்குமதிக்காக அரசாங்கமானது 55 Billion ரூபா பணத்தை செலவு செய்கிறது.

எனவே மேற்படி செலவினை குறைக்கும் நோக்கில் இலங்கையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருந்தது. 2017 ஆண்டு கறவைப் பசுக்களை இலங்கைக்கு ஒரு கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டு இதனால் இலங்கைக்கு BVD (Bovine Viral Diarrhoea), Faciola Hepatica போன்ற நோய்கள் பரவி இருந்தன. 

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட 75% க்கும் மேலதிகமான பசுக்கள் தரங்குறைந்தவையாகவும் பால் உற்பத்தி மிகவும் குறைந்தவையாகவும் காணப்பட்டன. அத்தோடு இவற்றுக்கான உணவுக்கட்டுப்பாடு மற்றும் காரணிகளினால் மேற்படி திட்டமானது தோல்வியடைந்தது.

இவ் விடயங்களை அவ்வப்போது எமது சங்கமானது அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் சுட்டிகாட்டி இருந்ததோடு எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் சம்பந்தமாகவும் விளக்கமளித்திருந்தது.

எனவே மேற்படி முறையில் மீண்டும் இலங்கைக்கு கறவைப் பசுக்களை கொண்டு வரும் திட்டம் செயற்படுத்தப்படும் பட்சத்தில் அது தொடர்பாக எமது சங்கம் எதிர்ப்பினை வெளிப்படுத்த விரும்புகிறது.

இலங்கையின் பால்துறையினை கட்டியெழுப்புவது தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்களினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் 2500 கறவைப் பசுக்களை இனவிருத்தி செய்வது தொடர்பாகவும் மேம்படுத்தல், செயற்கை தேசிய பண்ணைகளுக்கு மற்றும் நடுத்தர இறக்குமதி சினைப்படுத்தலை மேம்படுத்தல் கன்னி பசு வளர்ப்பு திட்டத்தை மேம்படுத்துதல், கால்நடை வைத்திய சேவையினை வலுவூட்டுதல் மற்றும் பல விடயங்கள் எமது சங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில் காணப்படுவதனால் அவ்விடயங்களிற்கு எமது சங்கம் பூரண ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கும் என்பதனையும் தெரிவித்து கொள்கின்றோம்.

அத்தோடு மேற்படி திட்டத்தினை எமது சங்கமானது தொடர்ச்சியாக அவதானித்து வருவதோடு அவற்றில் ஏதாவது தவறுகள் இடம்பெறும் பட்சத்தில் அது தொடர்பாக அரசாங்கத்திற்கு சுட்டிகாட்ட தவறாது என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment