அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம், மே மாதம் 28 முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தூதரகத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு விரைவான சேவைகளை வழங்கும் வகையிலும், தூதரகத்தினுள் பாரிய கூட்டம் ஒன்றுகூடுவதை குறைக்கும் வகையிலும், தூதரகத்திற்கு பொதுமக்கள் வருகை தர முன்னர், தங்களது தேவைகள் தொடர்பான விபரங்களை consular.slembabudhabi@mfa.gov.lk எனும் முகவரிக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தூதரகத்திற்கு வருகை தருவதற்கான திகதியும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடைமுறை வினைத்திறனான சேவைகளை வழங்கவும், அசௌகரியங்களை குறைப்பதற்கும், அமீரகம் வாழ் இலங்கை மக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவும்.

ஐக்கிய அமீரக அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தூதரகத்தின் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும் தங்களை தாழ்மையாக கேட்டுக்கொள்வதோடு, தங்களது ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஐவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மே 21ஆம் திகதி முதல் அதனை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment