நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பு

நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு ஜூன்  மாதம் 2ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கொரோனா வைரசால் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் திகதி முதல் ஊரடங்கு அமுலில் உள்ளது. அதன்பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இன்றுடன் அங்கு ஊரடங்கு நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை ஜூன் மாதம் 2ம் திகதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் டாக்டர் யுப்ராஜ் கத்திவாடா கூறுகையில், கொரோனா வைரசின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நேபாளத்தில் ஜூன் மாதம் 2ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி நேபாளத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 300-ஐ நெருங்குகிறது. மேலும் கொரோனோவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment