மலையக இளைஞர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதில் பாரபட்சம் காட்ட வேண்டாம் - முன்னாள் எம்.பி. அரவிந்த குமார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

மலையக இளைஞர்களை சொந்த இடங்களுக்கு அனுப்புவதில் பாரபட்சம் காட்ட வேண்டாம் - முன்னாள் எம்.பி. அரவிந்த குமார்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் சிக்கியுள்ள மலையக இளைஞர் யுவதிகளை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பாராபட்சம் காட்டகூடாது என பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

தமது தொழிலுக்காக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கு வேலைக்காக சென்ற ஏராளமானா மலையக இளைஞர் யுவதிகள் சொந்த இடங்களுக்கு வர முடியாமல் பாரிய இன்னல்களை சந்திக்கின்றனர்.

தற்சமயம் அரசாங்கத்தால் ஒரு சில பகுதியினர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேற்படி விடயத்தில் மலையக இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்கள் அனைவரது தகவல்களையும் உரிய வகையில் அறிக்கைப்படுத்தி அவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டியது மிகவும் அவசியம். இதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

(மடூல்சீமை நிருபர்)

No comments:

Post a Comment