திடீரென மயங்கி விழுந்த நபர் - கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

திடீரென மயங்கி விழுந்த நபர் - கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கண்டியிலிருந்து உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணம் அராலிக்கு சென்றுள்ளார்.

முறையாக பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலுக்கு அமைய 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நிலையிலேயே இன்று அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment