ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் சேவை இடம்பெறாது - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் சேவை இடம்பெறாது

மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அவ்விடங்களிலுள்ள தபால் அலுவலகங்கள் நாளை மறுதினம் (04) திறக்கப்படமாட்டாதென, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் அலுவலகங்கள் திறக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் தபால் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்றையதினம் தீர்மானமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

தபால் அலுவலங்களிலும் உப தபால் அலுவலகங்களிலும், தொற்றுநீக்கம் செய்யப்படவில்லை என்பதோடு, ஊழியர்களுக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லையெனக் கூறி, இது போன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி ஏற்கனவே தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment