இலங்கையில் கொரோனாவால் 8 ஆவது மரணம் பதிவானது - பெண்ணொருவர் முதன்முறையாக உயிரிழப்பு ! - News View

About Us

About Us

Breaking

Monday, May 4, 2020

இலங்கையில் கொரோனாவால் 8 ஆவது மரணம் பதிவானது - பெண்ணொருவர் முதன்முறையாக உயிரிழப்பு !

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குருநாகல் - பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாய் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

அத்துடன், குறித்த பெண் சிறுநீரக தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது பெண்ணாக இவராவார். இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இதற்கு முன்னர் உயிரிழந்த அனைவரும் ஆண்கள் என சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இன்று (04) முற்பகல் மரணமடைந்த குறித்த பெண்ணின் தகனக் கிரியைகள், சற்று முன்னர் கொடிகாவத்தையில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment