11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்துவது குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கலாம் - கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டே கடந்து செல்ல வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்துவது குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கலாம் - கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டே கடந்து செல்ல வேண்டும்

(ஆர்.யசி) 

எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்த சாத்தியங்கள் அதிகம் உள்ளது. எனவே திங்கட்கிழமை தொடக்கம் வழமையாக செயற்படுத்துவது குறித்து மக்கள் நம்பிக்கை வைக்கலாம் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன கூறினார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகளை வழங்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும் முன்னெடுக்காத வகையில் பல சலுகைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றோம். 

அத்துடன் கொவிட்-19 வைரஸ் பரவல் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் மூலமாக மிக சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட அச்றுத்தல் என கருதிய பிரதேசங்களில் கூட கொவிட்-19 வைரஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள காரணத்தினால் சமூக பரவல் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

எவ்வாறு இருப்பினும் சுகாதார அதிகாரிகளின் முழுமையான ஆலோசனைகளை தொடர்ந்தும் பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாம் கொரோனாவுடன் வாழ்ந்து கொண்டே இவற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது. 

அதேபோல் எமது எதிர்காலத்தை பலப்படுத்த பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தே ஆக வேண்டும். எம்மை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் கூட இப்போது இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் நாமும் எமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தாக வேண்டும். 

ஆகவே எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்க முடியும். அடுத்து வருகின்ற நான்கு நாட்கள் கட்டுப்பாடுகளுடன் நிலைமைகளை கையாண்டால் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றார். 

No comments:

Post a Comment