(இராஜதுரை ஹஷான்)
புகையிரத விசேட போக்குவரத்து சேவையினை பயன்படுத்த அனுமதி கோரி நிகழ்நிலை (ஒன்லைன்) முறை ஊடாக இதுவரை 11,500 பேர் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட அரச மற்றும் தனியார் துறையினர் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு புகையிரத போக்குவரத்து சேவையினை பயன்படுத்தவே இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
புகையிரத விசேட போக்குவரத்து சேவையினை பயன்படுத்த விண்ணப்பிக்கும் காலவகாசம் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றன. இதற்கமைய தற்போது ஒரு பகுதிக்கு இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை நாளை அதிகரிக்கப்படும்.
அத்துடன் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற புகையிரத சேவைக்கான கால அட்டவணை நாளை முதல் திருத்தியமைக்கப்படும்.
No comments:
Post a Comment