நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் மதுவுக்கு அடிமையானவர்களே, நாட்டில் 110 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது - பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் மதுவுக்கு அடிமையானவர்களே, நாட்டில் 110 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது - பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் 14 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் மது பாவனையே என தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாடி வீட்டு தொகுதிகளில் வசிப்பவர்கள் வைரஸ் தொற்று தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெளிப் பிரதேசங்களிலுள்ள நபர்கள் தமது பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதை மக்கள் அனுமதிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு வருபவரை வீடுகளில் தங்க வைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரை கண்காணிப்பதற்காக நாட்டில் 110 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 690 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 14 பேர் மது பாவனைக்கு அடிமையானவர்கள்.

அதேவேளை கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் மது பாவனையே.

அதற்கிணங்க சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிலைமையே அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனூடாகவே வைரஸ் தொற்று கிளைகள் உருவானது.

அரசாங்க புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கிணங்க இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இனங்காணப்பட்டதிலிருந்து இதுவரை 31 கிளைகள் மூலமே வைரஸ் தொற்று உருவாகியுள்ளது. 

இதுவரை அதில் 27 கிளைகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்கு கிளை களம் உள்ளதுடன் அதில் மூன்று கிளைகள் செயலிழக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போதைய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்.

குறிப்பாக மாடி வீட்டு தொகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். மாடி வீட்டு பகுதிகளில் வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் வந்து தங்கியிருப்பதற்கு இடமளிக்கக்கூடாது. 

அவ்வாறு வருபவர்களுக்கு ஒருநாளைக்கு எனினும் தங்குவதற்கு இடமளித்தால் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கிணங்க கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் தீர்மானிப்பர். அவ்வாறு யாராவது நபர் ஒருவர் பிரதேசத்துக்குள் வருவாரானால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அல்லது சுகாதாரத் துறையினருக்கு அறிவிப்பது முக்கியமாகும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலத்தில் பொதுமக்கள் தமது கடமைகளுக்கு அல்லது முக்கிய காரணங்களுக்காகவன்றி வெளியில் செல்லக்கூடாது. உணவு மற்றும் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரமே அவ்வாறு வெளியில் செல்ல முடியும என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் ஆரம்பித்ததிலிருந்து நேற்றுவரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 42 ஆயிரத்து 365 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் 11,000 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கிணங்க நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 500 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த ஆறு மணித்தியாலங்களில் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment