மன்னார், தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்றில் கலந்துகொண்டமைக்காக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மூன்று நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்றில் கலந்துகொண்ட புத்தளத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து மன்னார் தாராபுரம் பகுதி சுகாதார அதிகாரிகளால் இன்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மரண வீட்டில் கலந்துகொண்டிருந்தமை தொடர்பாக காதர் மஸ்தான் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (புதன்கிழமை) அவரது வீட்டிற்குச் சென்ற சுகாதார பரிசோதகர்கள் எதிர்வரும் மூன்று நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவரை கேட்டுள்ளனர்.
குறித்த மரண வீட்டில் அவர் கலந்துகொண்டு 20 நாட்கள் கடக்கின்ற நிலையில் அவருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் இதுவரை தென்படாமையினாலேயே அவர் மூன்று நாட்களுக்கு மாத்திரம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment