(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக போராடுகின்ற போர்வையில் அரசாங்கம் பாராளுமன்றத்தை கூட்டுவதை நயவஞ்சமாகத் தாமதித்து வருகின்றது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்றத்தை கூட்டுவதை வலியுறுத்தி அனைவரும் தற்போதே ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தல்கள், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் விரைவாகப் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மங்கள சமரவீர, இதில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
'கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு போராடுகின்றோம் என்ற போர்வையில் பாராளுமன்றத்தை கூட்டுவது நயவஞ்சகமான முறையில் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. அனைவரும் தற்போது விழித்துக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தற்போதே ஒன்றிணைய வேண்டும். பல்வேறு குறைபாடுகள் காணப்படினும், எப்போதும் பாராளுமன்ற ஜனநாயகமே சிறந்ததாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment