மட்டக்களப்பில் உணவுப்பஞ்சம் தவிர்க்க நெற் செய்கை ஆரம்பம் - அரசின் மானிய உர விநியோகம் துரிதமாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

மட்டக்களப்பில் உணவுப்பஞ்சம் தவிர்க்க நெற் செய்கை ஆரம்பம் - அரசின் மானிய உர விநியோகம் துரிதமாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

(எம்.பஹ்த் ஜுனைட்)

அரசாங்கத்தின் முன்கூட்டிய ஏற்பாட்டில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உணவுப்பஞ்சம் ஏற்படுவதனை தடுக்க 2020ம் வருட சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான வேலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் துரிதமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய இம்மாவட்டத்தில் 2020ம் வருட சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கு தேவையான மானிய உர விநியோகம் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலில் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஐ.சிராஜுன் நெறிப்படுத்துதலில் கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் கே.ஜெகன்னாத்தின் ஒத்துழைப்புடன் இம்மாவட்டத்திலுள்ள 16 கமநல கேந்திரங்கலூடாக சீரான விநியோகம் இடம்பெற்று வருகின்றன.
இம்மாவட்டத்தில் நெல் வயல்களுக்கு 7650.25 மெட்ரிக் தொன் மானிய உரம் அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் 4787.62 மெட்ரிக் தொன்மானிய உரம் இங்கு கொள்வனவு செய்யப்பட்டு இதன்படி கடந்த திங்கl;கிழமை வரையில் 11995 விவசாயிகளுக்கு 36770 ஏக்கர் நெல்வயல்களுக்கு 3977 மெட்ரிக் தொன் மானிய உரம் விநியோகம் செய்திருப்பதாக தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது.

இதே இந்த உர மானியத்திட்டத்தில் வந்தாறுமூலை கமநல கேந்திர பிரிவில் 3500 விவசாயிகளுக்கு 6797 ஏக்கர் நெல் வயல்களுக்கு உரமானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வந்தாறுமூலை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பதுர்தீன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment