(நா.தனுஜா)
நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை அடைந்துகொள்வதற்கு அரசியல், பொருளாதார, விவசாய மற்றும் சமூகவியல் துறைசார் தரப்புக்களுடன் அரசாங்கம் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது குறித்து கரு ஜயசூரிய அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.
குறிப்பாக மிகவும் நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் 'கலந்துரையாடல்' என்பது வெற்றிக்கு மிகவும் அவசியமானதாகும். நாம் இப்போது பொருளாதார மற்றும் உணவுப் பொருட்களுக்கான நெருக்கடியைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
எனவே தற்போதைய பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை அடைந்து கொள்வதற்குற அரசாங்கம் அரசியல், பொருளாதார, விவசாய மற்றும் சமூகவியல் துறைசார் தரப்புக்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறேன்'.
No comments:
Post a Comment