முட்டை உற்பத்தியாளர்களிடம் 15 மில்லியன் முட்டைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடப்பதாக உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கின்றது.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால். தாம் உற்பத்தி செய்யும் முட்டைகளை சந்தைப்படுத்த முடியாமல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும் செலவில் கோழிப் பண்ணைகள் நடத்தப்பட்ட போதிலும் அதன் செலவை ஈடு செய்ய முடியாமல் இருப்பதாகவும் அதிக விலைக்கு கோழி தீனிகளை வாங்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை முட்டை ஒன்று 10 ரூபா என்ற நிர்ணைய விலையை அரசாங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment