புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால், இந்தக் கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

நான்கு வயதான நடியா என்ற பெயர் கொண்ட மலையன் புலியே மனிதனின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது மிருகம் என நம்பப்படுகிறது.

மேலும், சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. 

எனினும், பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

குறித்த வனவிலங்குப் பூங்கா மார்ச் மாதம் 16 ஆம் திகதியன்று கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment