அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்க நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்க நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பத்திரண

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேசசாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக குறிப்பிட்டார். 

மேலும், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை இரத்து செய்யவும் வரையறைக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவித்தார். 

இறக்குமதி பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எதிர்வரும் காலத்தில் இலங்கையில் வலுவான உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டே அரசாங்கத்தால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment