விசேட தேவையாளர் கொடுப்பனவு வழங்கச் சென்ற தபால் அதிபரை தாக்கிய மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

விசேட தேவையாளர் கொடுப்பனவு வழங்கச் சென்ற தபால் அதிபரை தாக்கிய மூவர் கைது

விசேட தேவையுடைய நபருக்கான கொடுப்பனவு வழங்கச் சென்ற, ருக்மல்பிட்டிய தபால் அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (06) பிற்பகல் 3.00 மணியளவில் தங்கலகந்த, கட்டுவன, பிரதேசத்திலுள்ள விசேட தேவையுடைய நபருக்கு, விசேட தேவை கொடுப்பனவு வழங்குவதற்காக அவரது வீட்டிற்கு சென்ற குறித்த தபாலதிபர் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவரினால் கை, கால்களாலும், பொல்லினாலும் தாக்கியதாக, ருக்மல்பிட்டிய தபாலதிபரினால் கட்டுவன பொலிஸ் நிலையத்தில் நேற்று மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (20) இரவு 7.00 மணியளவில் தங்கலகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதான குறித்த சந்தேகநபர்கள் 26, 27, 28 வயதுடைய கட்டுவான பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அவர்கள் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்பபடுத்தப்பட உள்ளனர். கட்டுவான பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment