உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?

இந்தியப் பிரதமர் நாட்டு மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி சீன நாட்டின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

கனடா நாட்டு பிரதமரின் மனைவி படுக்கையில் இருந்தவாறே கண்ணீரோடு பேட்டி கொடுக்கிறார்.

இங்கிலாந்து இளவரசர் கொரோனா என்ற கொடிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இத்தாலி பிரதமர் இறந்தவர்களை அடக்கம் பண்ண எங்களிடத்தில் இடமில்லை ஆட்களுமில்லை என்று பொது இடத்தில் கதறுகிறார்.

உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?

அண்ட சராசரங்களையும் ஆளுவோம் என்று மார்தட்டிய வல்லரசு நாடுகள் இன்று கண்ணுக்கு புலப்படாத வைரஸை கண்டு அஞ்சி நிற்கின்றன.

சூரியனையும் சந்திரனையும் செவ்வாயையும் புதனையும் அணு அணுவாய் ஆராய்ச்சி செய்த மனித குலம் செய்வதறியாது கலங்கி நிற்கிறது.

செவ்வாய் கிரகத்தில் குடியேறப்போகிறோம் என்ற மனித இனம் பூமியில் வாழ வழியின்றி திகைத்து நிற்கின்றது

நாட்டையும் நாட்டின் தலைவர்களையும் பாதுகாக்க குண்டு துளைக்காத வாகனங்களை உற்பத்தி செய்த மனித ஆற்றல் ஒரு தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கொத்து கொத்தாய் செத்து மடிகிறது.

உலகம் இவ்வளவு தான்.

இங்கே எவனும் உயர்ந்தவனும் இல்லை. தாழ்ந்தவனும் இல்லை.

தன் மதம் தான் உயர்ந்தது,
தன் சாதிதான் உயர்ந்தது,
தன் பணம், சொத்து சுகம் தான் உயர்ந்தது,
தன் படிப்புதான் உயர்ந்தது,
தன் பதவிதான் உயர்ந்தது,
தன் புத்திதான் உயர்ந்தது,
தன் அந்தஸ்து தான் உயர்ந்தது,
தன் மக்கள்தான் உயர்ந்தவர் 
என்று கூறும் அறிவாளிகளுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்

வாஜிட் முஹம்மட்
ஓட்டமாவடி

No comments:

Post a Comment