உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை கடந்தது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 28 லட்சத்து 4 ஆயிரத்து 559 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 32 ஆயிரத்து 578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 361 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும் இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment