நேற்றையதினம் (24) புனானையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 10 பேர் வீடு திரும்பியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செற்பாட்டு மையத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, இதுவரை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 4,376 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது 2,869 பேர் நாடு முழுவதிலுமுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment