கொரோனா என சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பிரிவிலிருந்து, கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் ஒருவர், IDH எனப்படும் தேசிய தொற்று நோயியல் தடுப்புப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இத்தாலியிலிருந்து நேற்று நாட்டிற்கு வருகைதந்த 43 வயதான ஒருவரே IDH வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் இந்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் கடந்த 3 வருடங்களாக இத்தாலியில் வசித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகத்தில், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் அங்கிருந்து IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரும் கடந்த 6ஆம் திகதி இத்தாலியிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 19 பேர் சிகிச்சை பெறுவதாக அங்கொடை தேசிய தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment