ஒரு பக்கம் ரஷிய ஜனாதிபதியுடன் சந்திப்பு, மறுபக்கம் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஆயுத உதவி - துருக்கி ஜனாதிபதியின் வியூகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

ஒரு பக்கம் ரஷிய ஜனாதிபதியுடன் சந்திப்பு, மறுபக்கம் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஆயுத உதவி - துருக்கி ஜனாதிபதியின் வியூகம்

சிரிய போர் உச்சத்தை அடைந்துவரும் நிலையில், ஒரு பக்கம் அமெரிக்க டொனால்ட் டிரம்பிடம் ஆயுத உதவி கேட்டுள்ள துருக்கி ஜனாதிபதி மறுபக்கம் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நாளை மாஸ்கோவில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. 

கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையில் உள்நாட்டுப்போரில் தொடங்கிய சண்டை தற்போது நாடுகளுக்கு இடையேயான சண்டையாக உருவெடுத்து வருகிறது. 

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் சண்டையில் சிரியா மற்றும் துருக்கி என இரு தரப்பிலும் 50 க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரிய போர் விமானத்தை துருக்கி படைகள் சுட்டுவீழ்த்துவதும் அதற்கு பதில் தாக்குதலும் என சண்டை நீண்டு கொண்டே போவதால் போர் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது. 

இந்த சண்டையில் சிரிய படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷியா, கிளர்ச்சியாளர்களையும் துருக்கி படைகளையும் குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறது.

இதற்கிடையில், துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் 'சிரிய போருக்கு அதிக ஆயுதம் தேவைப்படுவதால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், சிரிய விவகாரம் தொடர்பாக ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் நாளை மாஸ்கோவில் சந்திக்க உள்ளார். 

இந்த சந்திப்பின் போது இட்லிப் மாகாணத்தில் நடைபெற்று வரும் தாக்குதல்களை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் துருக்கியில் அகதிகளாக உள்ள மக்களை மீண்டும் சிரியாவில் குடியமர்த்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment