திடீரென மயங்கி விழுந்தார் வெளிநாட்டவர் தங்கும் விடுதி முகாமையாளர்! - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

திடீரென மயங்கி விழுந்தார் வெளிநாட்டவர் தங்கும் விடுதி முகாமையாளர்!

பண்டாரவளை, எல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் வெளிநாட்டுப் பயணிகள் தங்குவார்கள் என்றும், தற்போதும் அங்கு இரண்டு அயர்லாந்துப் பிரஜைகள் தங்கியிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10.30 மணியளவில் இவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுகாதாரப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.

அதன் பின்னர் அவர் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விடுதி உரிமையாளர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment