வெறிச்சோடியிருந்த கொழும்பு உட்பட முக்கிய நகரங்கள் பரபரப்பாக இயங்கிய சில மணி நேரங்கள் ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

வெறிச்சோடியிருந்த கொழும்பு உட்பட முக்கிய நகரங்கள் பரபரப்பாக இயங்கிய சில மணி நேரங்கள் !

இன்று காலை 6.00 மணிக்கு கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. 

இந்நிலையில், நீர்கொழும்புக்கு உட்பட்ட பிரதேசங்களில் காலை 06 மணி முதல் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். 

இதன்போது சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க முகக் கவசம் அணிந்தும், மக்களுக்கிடையில் இடைவெளியை பேணுவதிலும் மக்கள் அக்கறையுடன் செயற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. 

சில இடங்களில் மக்கள் ஏனோதானோவென முண்டியடித்தும் சிந்தனையில்லாது செயற்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. 

இதேவேளை, முகக் கவசம் அணியதவர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

கடைகள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் நுகர்வோருக்கு கைகளை சுத்தம் செய்வதற்கான விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டதுடன் நபர்களுக்கான இடைவெளி பேணப்பட்மை விசேட அம்சமாகும். 

இந்நிலையில் மீண்டும் இப்பகுதிகளுக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment