அர்த்தமற்றதாகும் ஊரடங்கு - வட மாகாண ஆளுநருக்கு அசவர கடிதம் அனுப்பினார் முன்னாள் சுகாதார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

அர்த்தமற்றதாகும் ஊரடங்கு - வட மாகாண ஆளுநருக்கு அசவர கடிதம் அனுப்பினார் முன்னாள் சுகாதார அமைச்சர்

ஊரடங்கு ஒரே நேரத்தில் தளத்தப்படுவதால் மக்கள் அளவுக்கதிகமாக ஒன்றுகூடுகின்றமையால் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு ஏற்படுகின்ற அபாயம் உள்ளமையோடு, நோய் பரம்பலுக்கான ஏதுநிலை மேலும் அதிகரிக்கக் காரணமாகவும் இந்த நிலைமை அமைகின்ற அபாயமுள்ளது. ஆகவே நாம், அவசரமாகத் திட்டமிட்டு சில முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு சரியான ஓர் ஒழுங்கமைப்பை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு வடக்கு ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸூக்கு அசவர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம்.

அவரது கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு கொறோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவருவது பாராட்டுக்குரியது.

இலங்கையில் நோய் வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே புத்திசாலித்தனமானது. ஏனெனில் கொறோனா வைரஸ் நோய் தாக்கத்தினால் மூச்சுத்திணறல் நிலை ஏற்படுமானால் எமக்குள்ள அவசர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கை அங்கு கடமையாற்றும் பயிற்றப்பட்ட சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனைய வசதிகளை எடுத்து நோக்கினால் நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக விடைதேட முடியாது என்பதே உண்மை.

எனவே மக்கள் நலன்சார்ந்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளிற்கு நாம் அனைவரும் ஒத்துளைப்பு வழங்குவது இன்றியமையாததாகின்றது.

ஊரடங்கின் அர்த்தம் புரிந்தும் புரியாதவர்களாக ஊரங்கை மீறுவது கெட்டிக்காரத்தனம் என நினைப்பவர்களும் ஊரடங்கு வேளைகளில் வெவ்வேறு அத்தியாவசியமற்ற காரனங்களை கூறிக்கொண்டு வீட்டைவிட்டு வெளிவருபவர்களும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொருள்களை வாங்கும் நோக்கில் முண்டியடித்துக்கொண்டு சுகாதார விதிகளை மீறி ஒன்றுசேருவதும் மக்களும் இந்தநாடும் இன்னும் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய அழிவை புரியவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

எனவே கெளரவ ஆளுநர் அவர்கள் சிலநடைமுறைகளை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என மக்கள் நலன் சார்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

1. வடக்கு மாகாணம் முழுவதும் சனத்தொகை மற்றும் புவியியல் அமைப்பு சார்ந்து வலயங்களாக பிரிக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு வலயங்களிலும் காணப்படும் தனியார் மற்றும் அரச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருள்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும், அது அங்கு வாழும் மக்கள் தொகைக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

3. ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் பொலிசாரின் உதவியுடன் சம்மந்தப்ட்ட வலயங்களில் வாழும் மக்கள் அந்தந்த வலயங்களிலேயே பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

4. அவசர மருத்துவ நிலைகளிலும் ஏனைய அவசர சந்ததர்ப்பங்களிலும் மட்டும் குறிப்பிட்ட வலயங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறான மக்கள் நலன்சார் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதால்

1. நோய் பரம்பலை குறிப்பிட்ட வலயத்தினுள் கட்டுப்படுத்துவதுடன் தடுப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த முடியும்.

2. ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் அநாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்தி நோய்ப்பரம்பலை கட்டுப்படுத்தலாம்.

கெளரவ ஆளுனர் அவர்கள் மேற்படிவிடயங்களை கவனத்தில் எடுத்து கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். – என்றுள்ளது.

No comments:

Post a Comment