கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது என எதிர்த்து மட்டக்களப்பு நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றுக்கு முன்னால் இன்று புதன்கிழமை பணி பஸ்கரிப்பும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பி. பிறேமநாத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.
கொரோன வைரஸ் மட்டக்களப்பிற்கு வேண்டாம், மட்டக்களப்பை சுடுகாடாக்காதே, கொரேனாவிற்கு கிழக்குத்தான் இலக்கா, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சட்டத்தரணிகள் சங்க தலைவர் பி. பிறேமநாத் தெரிவிக்கையில், கொரோன வைரசினால் நபர்கள் யாராவது அடையாளம் காணப்பட்டால் குறித்த போதனா வைத்தியசாலையில் கொண்டுவந்து சிகிச்சையளிக்கப்படும் என்ற தகவல் உண்மையாக இருக்கின்ற காரணத்தினால் அவ்வாறான ஒரு விடயத்தை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளக் கூடாது.
எனவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது இங்கு குறித்த வைரஸ் பரவக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது அவ்வாறான நிலை நீடிக்கப்படுமாயின் மட்டக்களப்பு மாவட்டம் பிரித்து ஒரு அபாயகரமான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.
எனவே பொறுப்பு வாய்ந்த சமூகம் என்ற அடிப்படையிலே இந்த சந்தர்ப்பத்திலே ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதனை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறித்த வைரஸ் தொடர்பான நோயாளிகளை இந்த வைத்தியசாலைக்கு கொண்டுவரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இந்த நீதிமன்ற பணிப்பஸ்கரிப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment