மனித குலத்தின் உருவாக்குவதற்கும் அனைத்து நாடுகளினதும் சமூக அமைப்பின் இருப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் மிக முக்கிய காரணியாகத் திகழ்வது மகளிரின் அர்ப்பணிப்பு என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்ர். மகளிரின் பங்களிப்பை கௌரவத்துடன் நினைவுகூர்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சனத்தொகையில் அரைவாசியை விடக் கூடுதலான தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகளிரின் சமூக அபிவிருத்தி சுட்டெண் உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தரத்தை அடைந்திருப்பதன் மூலம் நாம் இலங்கை பெண்களுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சமூக பங்களிப்பு மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பு போன்ற பலவிடயங்களில் முன்னிற்பதன் மூலம் இன்று எமது பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை பெண்களே வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு
No comments:
Post a Comment