வெப்பம் அதிகரிப்பு இளநீர், தோடை, வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

வெப்பம் அதிகரிப்பு இளநீர், தோடை, வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடிப்பு

பாறுக் ஷிஹான்

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண வெப்பநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வெப்பத்தை தணிப்பதற்காக பிரதான வீதியோரங்களில் உள்ள இளநீர், தோடை, வெள்ளரிப்பழம் ஆகியவற்றை அதிகமாக கொள்வனவு செய்வதை காண முடிகிறது.

அத்துடன் இம்மாவட்டத்தில் நிலவி வரும் அதிகவான வெப்பம் காரணமாக வெள்ளரிப் பழத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

தற்பொழுது கடும் வெப்பம் நிலை ஏற்பட்டிருப்பதுடன் அதனை மக்கள் வெப்பத்தை சமாளிக்கவும் சூட்டினை தாங்கிக் கொள்ளவும் குளிரான பழங்களை அதிகம் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதேவேளை இளநீர் ரூபா 80 முதல் ரூபா 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் தோடை ஒன்று 50 முதல் 70 வரை விற்பனையாகிறது.

குறிப்பாக வெள்ளரிப்பழத்திற்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வெள்ளரிப்பழம் 150 ரூபா முதல் 250 ரூபா வரை விற்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

இளநீர் யாழ்ப்பாணத்திற்கு குருநாகல் மற்றும் புத்தளம் பகுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment