தென்னாபிரிக்க அணியினர் இந்திய சுற்றுப் பயணத்தின்போது தங்கியிருந்த ஹோட்டலில் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பாடகி கரீனா கபூரூம் தங்கியிருந்தார் என டைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க அணியினர் உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த ஹோட்டலில் பாடகி தங்கியிருந்தார் என டைம்ஸ் ஓவ் இந்தியா தெரிவித்துள்ளது.
அவர் அந்த ஹோட்டலில் உணவருந்தினார் பலரை சந்தித்தார் ஊடக நிகழ்வொன்றில் கலந்துகொண்டார் கண்காணிப்பு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கரீனா யாருடன் தொடர்புகொண்டார் என்பதை கண்டறிவதற்காக சிசிடிவி காட்சிகளை ஆராய வேண்டும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாடகிக்கு வைரஸ் இருப்பதற்கான சாத்தியமுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவர் தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல்களை மீறினார் வீட்டிற்குள் இருப்பதற்கு பதில் சமூகத்தில் நடமாடினார் என லக்னோ மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நோய் உறுதியாகியுள்ள நிலையில் அவர் தன்னுடன் தொடர்பு கொண்டவர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நோய் தொற்றிற்குள்ளான பாடகியின் வீட்டிற்கு அருகில் வாழும் சுமார் 22,000 பேரினை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment