பிரிட்டன் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக உலகம் முழுவதும் பரவி வருவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதற்கமைய 26 ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு மாத காலத்திற்கு இத்தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,000 இனை தாண்டியுள்ளதோடு அங்கு 38 பேர் இது வரை மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 1,267 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 70 பேர் சீனா மற்றும் டயமண்ட் பிரின்சஸ் கப்பல்களிலிருந்து வந்தவர்களாவர்.
1,197 பேர், அமெரிக்காவில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் உள்ளிட்ட 48 மாநிலங்களில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 114 நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124,519 எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறப்பு எண்ணிக்கை 4,607 ஆக உயர்வடைந்துள்ளது.
சீனாவில் மாத்திரம் 80,793 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்னதோடு, அதில் 62,793 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3,169 பேர் அங்கு மரணமடைந்துள்ளதாகவும், சீன சுகாதார ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்நோயின் உக்கிரம் அதிகரித்துள்ள, இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,462 ஐ எட்டியுள்ளதோடு, அவர்களுள் 1,045 பேர் குணமடைந்துள்ளதோடு 827 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, இத்தாலி அரசாங்கம் 25 பில்லியன் யூரோக்களை (28.3 பில்லியன் டொலரை) ஒதுக்கியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, தென் கொரியாவில் 7,869 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அங்கு 60 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
ஈரானில் 7,000 இற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment