ரவி கருணநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மனுக்கள் நாளை வரை ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

ரவி கருணநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மனுக்கள் நாளை வரை ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பிணை முறி மோசடி தொடர்பிலான வழக்கிற்கு அமைய, அவர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள பிடியாணையை இடைநிறுத்துமாறு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் இன்றையதினம் (11) மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்ட மா அதிபர் சார்பில் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, இம்மனுக்கள் நாளை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மனுக்கள் தொடர்பில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு, சட்ட மா அதிபரினால் விடுக்கப்பட்ட எழுத்து மூலமான கோரிக்கையை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இம்மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று (11) பிற்பகல் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான பிடியாணைக்கு எதிராக, முன்னாள் எம்.பி. ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், மத்திய வங்கி அதிகாரியான சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் அவரது சட்டத்தரணியான சமன் குமார ஆகியோரர் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment