ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு, இம்மாதம் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு உக்ரைனில் இருந்து மிக் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல்களில் முறையற்ற விதத்தில் தலையிட்டு நிதி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment