(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தலில் இணைந்து செயற்பட்டதை போன்று இணக்கமாக செயற்பட்டால் மாத்திரமே பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளார்.
கூட்டணியில் முக்கிய பங்கினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வகிக்கின்றது. கூட்டணியில் இணைந்து கொண்டதன் பின்னரும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒரு சிலர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கருத்துக்களை குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறான கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட தீர்மானமாக காணப்பட்டாலும். கூட்டணிக்கு அவை ஒரு கட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment