20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தேவாலயத்தின் பெண் மற்றும் ஆண் உறுப்பினர்களை குறைந்தது 88 முறை 'ஆன்மீக குளியல்' மூலம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மதபோதகருக்கு, 34 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த 60 வயதான மைக்கல் ஒலூரோன்பி ஆறு பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
பர்மிங்காமில் வசித்து வந்த மைக்கல் ஒலூரோன்பியும் அவரது மனைவி ஜூலியானாவும் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
15 பாலியல் துஷ்பிரயோகங்கள், ஏழு முறைகேடான தாக்குதல் மற்றும் இரண்டு பாலியல் வன்கொடுமைகளுக்காக குறித்த மதபோதகருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, குறைந்தது 88 தடைவைகள் அவர் பாதிக்கப்பட்டவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் பெண்களில் சிலர் பலமுறை கர்ப்பமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து ஜூலியாவுக்கும் தனது கணவருக்கு உதவி செய்ததற்காக 11 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment