கைக்குண்டுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, March 28, 2020

கைக்குண்டுடன் ஒருவர் கைது

வவுனியா, மயிலங்குளம் பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (27) மாலை இக்கைது இடம்பெற்றுள்ளது.

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போதே வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் குறித்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர், ஏற்கெனவே பெண்கள் இருவருடைய தங்கச்சங்கிலி காணாமல் போன சம்பவத்துடன் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment