அன்றாட உழைப்பாளிகளின் குடும்பங்களுக்கு வசதி படைத்தோர் உதவுவது கட்டாயமாகும் - முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

அன்றாட உழைப்பாளிகளின் குடும்பங்களுக்கு வசதி படைத்தோர் உதவுவது கட்டாயமாகும் - முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குட்பட்டிருக்கும் உறவுகள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி பிரார்த்திப்பதாக முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார்.

அவர் 22.03.2020 வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது நாம் அனைவரும் இந்த வைரஸ் தாக்கம் ஏற்படாதிருக்கும் வகையிலும் மேலும் பரவாதிருக்கும் வகையிலும் அறிவியல் ரீதியில் சுகாரத்துறை கூறும் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்துகொள்வது மிக முக்கியமானது. குறிப்பாக அரச மருத்துவ உத்தியோகத்தர் கூட்டமைப்பு கூறும் வழிப்படுத்தல்களை செவிமடுத்து செயல்படுத்துவது அவசியமாகும்.

மேலும், சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது நமது பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானமாகும் என்பதை அழுத்தியுரைக்க விரும்புகிறேன்.

நாடு மூடப்பட்டு முடங்கி இருக்கிற நிலைமையில் தொழிலுக்கு செல்ல முடியாது வாழ்க்கைச் செலவுக்கு அல்லல்படும் அன்றாட உழைப்பாளிகளின் குடும்பங்களுக்கு வசதி படைத்தோர் உதவுவது "பக்கத்து வீட்டார் பசித்திருக்க நாம் உண்ணுவது கூடாது என்ற புகழ் பெற்ற பகிர்ந்துண்ணும்" தத்துவத்திற்கு ஏற்ப கட்டாயமாகும் என்பதை கவனத்தில் எடுப்போமாக என வேண்டிக்கொள்கிறேன்.

உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மூன்று வேளை உணவை குறைத்து இரண்டு வேளையாக உண்ணவும் முடிந்தளவு உணவின் அளவைக் குறைத்து எடுக்கவும் பழகுவதும் இன்றியமையாததாகும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழி, கூட்டம் கூட்டமாக வாழ்வது என்று நம்பியிருந்த நமக்கு கூடிவாழ்தல் என்பது மனதளவில் ஒற்றுமைப்பட்டு வாழ்தல் என்றும், மனிதர்கள் அனைவரும் இன மத நிற தேச பாலின மற்றும் ஏனைய பேதங்களையும் எல்லைகளையும் களைந்து ஒற்றுமைப்படுதல் என்றும், ஆளையாள் பரஸ்பர உதவியோடும் கவனிப்போடும் வாழ்தல் என்றும் இந்த கொரோனா கற்றுத் தந்திருக்கிறது என்பதை உணர்வது காலத்தின் காட்டாயமாகும்.

அனைவருக்கும் நோய் நொடியற்ற நிகழ்கால எதிர்கால வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment