இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குருநாதன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக அம்பிகா சற்குருநாதன் களமிறங்குகின்றார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் இன்று இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் என ஆங்கில செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு பங்களிப்பு செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெப்ரவரி 26 ஆம் திகதி நான் எனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சமர்ப்பித்தேன், மார்ச் 7 ஆம் திகதி முதல் பதவி விலகியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாத காலமாக பதவி விலகுவது குறித்து ஆழமாக சிந்தித்து வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள அவர் தனது இராஜினாமாவிற்கும் நாட்டில் சமீபத்தில் இடம்பெற்றவிடயங்களிற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment