சர்வதேச ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ஆராய விசேட குழு - உள்ளூர் படகுகளுக்கு அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 7, 2020

சர்வதேச ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ஆராய விசேட குழு - உள்ளூர் படகுகளுக்கு அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பது தொடர்பாக ஆராய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட குழு ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.

இந்தக் குழுவில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா மற்றும் சர்வதேச கடலில் மீன்பிடித்தலில் ஈடுபடும் உள்ளூர் ஆழ்கடல் படகுகளின் உரிமையாளர்கள் இருவர், துறைசார் நிபுணர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

சர்வதேச கடலில் மீன்பிடியில் ஈடுபடும் உள்ளூர் ஆழ்கடல் வள்ளங்களுக்கு வி.எம்.எஸ். முறைமை மற்றும் குளிரூட்டல் வசதி போன்றவை பொருத்தப்படும் வரையான தற்காலிக அனுமதிப் பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனையும் வழங்கியுள்ளார். 

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடி ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகளால் தொழில்துறை பாதிக்கப்படுவதாக, அகில இலங்கை ஆழ்கடல் வள்ளங்களின் உரிமையாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்தித்து (04) அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடி ஆழ்கடல் வள்ளங்களில் இலங்கைக்கு மீன்களை கொண்டுவரும் போது இடம்பெறும் முறைகேடுகள் கட்டுப்படுத்த வேண்டும். தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள சர்வதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 35 மீன்பிடிப் படகுகளின் அனுமதியை மீண்டும் புதுப்பித்து கொடுக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை மீனவர்களின் பிரதிநிதிகள் முன்வைத்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக இரண்டு வார காலப் பகுதிக்குள் இலங்கை கடற்றொழிலாளர்கள் திருப்தியடையும் வகையில் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்தார். இவற்றுக்கான அனுமதிகளை கடந்த அரசாங்கமே வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment