ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வுஹான் நகரத்தை தவிர ஹுபே மாகாணத்தில் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் விமான நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சரக்கு விமானங்களும், பயணிகள் விமானங்களும் தமது வழமையான பணிகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், சீன அரசாங்கம் ஹுபே மற்றும் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றது. இந்நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரோனாவின் மையமான வுஹானுக்கான விமான சேவைகள் அனைத்தும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் ஞாயிற்றுக்கிழமை 45 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு சென்றவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment