நாவிதன்வெளி பிரதேச செயலக சர்வதேச மகளீர் தின நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 8, 2020

நாவிதன்வெளி பிரதேச செயலக சர்வதேச மகளீர் தின நிகழ்வு

பாறுக் ஷிஹான்

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 'அவள் தைரியமானவள் நாட்டுக்கு பலமானவள்' எனும் தொனிப் பொருளில் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் பிரதேச பெண்கள் மகாசபாவும் இணைந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மத்திய முகாம் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) முற்பகல் முதல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

மத்தியமுகாம் தபால் நிலையம், பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் மர நடுகை இடம்பெற்றதோடு மகளீர் பெருமை கூறும் கலை நிகழ்வுகள் கைப்பணி பொருட்கள் கண்காட்சி இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வின் சாதனை பெண்களின் வரலாற்றுரை இடம்பெற்றதோடு சாதனை பெண்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

இதனையடுத்து பிரதேசத்திலிருந்து பெருமை தேடித் தந்த ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுபாகர், எஸ்.பார்த்தீபன், இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு தெரிவான நௌஷாட் மற்றும் கைதர் அலி, தேசிய ரீதியில் சிறந்த வானொலி அறிவிப்பாளராக தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் அறிவிப்பாளர் கே. குலசிங்கம், உயிரியல் துறைக்கு பிரதேத்திலிருந்து முதல் முறையாக தெரிவான மாணவி, ஜே.எஃப். சஜீரா தேசிய, சர்வதேச ரீதியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், விஷேட அதிதியாக உதவி பிரதேச செயலாளர் என். நவனீதராஜா, மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் என். தர்சினி, மகளீர் அமைப்புக்கள், பிரதேச பெண்கள் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment