எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 8, 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தேவையான நிதியை அரசாங்கம் விடுவித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக 700 கோடி ரூபா தேவைப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகளை தெரிவு செய்யும் பணி நிறைவு பெற்றிருப்பதுடன், அனுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக் கடமைகள் குறித்து அவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார். 

இதனிடையே தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. விண்ணப்பங்களை 16ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment