தன்னைத் தானே தனிமைப்படுத்தினார் கனடா பிரதமர் - மனைவி கொரோனா பாதிப்புக்கான அறிகுறி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

தன்னைத் தானே தனிமைப்படுத்தினார் கனடா பிரதமர் - மனைவி கொரோனா பாதிப்புக்கான அறிகுறி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

பிரதமரின் மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

பிரிட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தனது மனைவி சோபி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். 

கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மருத்துவர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிலையை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார், அவர் வீட்டிலிருந்து பணி புரிகின்றார் என அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment