AREA BOYS அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான சீருடை அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் மிக விமர்சையாக நடை பெற்றது.
வாழைச்சேனையில் அமைந்துள்ள அஸ் ஸபா சங்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக சாலிகாத் மஷ்ஜித் இமாம் அஜ்மீர் அவர்களும், மூத்த உறுப்பினர்களான இர்பான் மற்றும் நிஹ்மத்துலா அவர்களும், விளையாட்டுக்கழக ஆலோசகர்கள், கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு உரையாற்றிய அஜ்மீர் அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு சமூகம் சார்ந்த பொறுப்புகள் பற்றி விளக்கினார். மேலும் விளையாட்டுக்கழக மூத்த வீரர் ஹக்கீம் உரையாற்றுகையில் விளையாட்டு மற்றும் கல்வி ரீதியில் இளைஞர்களுக்கு ஏற்படும் சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் முறைகள் பற்றியும் உரையாற்றினார்.
கழகத்திற்கான புதிய சீருடையினை இமாம் அஜ்மீர் அவர்களும், மூத்த உறுப்பினர்களான இர்பான் மற்றும் நிஹ்மத்துலாவினால் 2020 ஆம் ஆண்டிற்கான சீருடை வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிழ்வில் கடந்த கால போட்டிகளில் சிறப்பான முறையில் திறமைகளை வெளிக்கொணர்ந்த கழகத்தின் விளையாட்டு வீரர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஏ.எம்.எம்.பர்ஹான - வாழைச்சேனை
No comments:
Post a Comment