அமெரிக்காவில் கொரோனா பலி 65 ஆக உயர்வு - அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த மக்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

அமெரிக்காவில் கொரோனா பலி 65 ஆக உயர்வு - அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நாட்டில் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 485 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வீட்டில் சேமித்துவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

அந்நாட்டின் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் குவிந்துவரும் மக்கள் பல நாட்களுக்கு தேவையான பொருட்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்செல்கின்றனர். இதனால் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும், அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அச்சமும் நிலவுகிறது.

அமெரிக்காவில் கொரோனா பரவியுள்ள மாகாணங்கள் விவரம்:
வாஷிங்டன் - 42 பலி, 769 பேருக்கு பாதிப்பு 
நியூயார்க் - 3 பலி, 729 பேருக்கு பாதிப்பு
கலிஃபோர்னியா - 6 பலி, 371 பேருக்கு பாதிப்பு
கொலரடோ - 1 பலி, 131 பேருக்கு பாதிப்பு
ஃபுளோரிடா - 4 பலி, 155 பேருக்கு பாதிப்பு
மாசசூசெட்ஸ் - 164 பேருக்கு பாதிப்பு

No comments:

Post a Comment

Post Bottom Ad